Malaysia Website Awards

Happy Birthday TUN

மண்ணில் பிறந்த சீமானே
மாமனிதராய் உயர்ந்த கோமானே
மக்களுக்காக உழைத்திடும் எஜமானே
எங்கள் மனதில் நிறைந்திருக்கிறாய் என்றுமே

இஸ்லாமியக் கவியரங்கம்

இஸ்லாமியக் கவியரங்கம் 

விளக்கம் நம் நாட்டில் வாழ்ந்த, வாழும் இந்திய முஸ்லிம் கவிஞர்களை அங்கீகரிக்கும் நோக்கத்தில் இவ்வரங்கம் நடைபெற்றது. தமிழார்வத்தை புலப்படுத்தும் நோக்கிலும் தமிழ்க் கவிதைகள் எழுத ஊக்குவிக்கும் வகையிலும் சோமா அரங்கத்தில் பெர்மிம், இமிம் மற்றும் எம்.எம்.ஒய்.சி ஏற்பாட்டில் நடைபெற்ற இஸ்லாமியக் கவியரங்க நிகழ்ச்சியில் நம் நாட்டை சேர்ந்த ஏழு இந்திய முஸ்லிம் கவிஞர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர். கன்னி முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
நாள் 12 மார்ச் 2019 இடம் சோமா அரங்கம் பங்கேற்பாளர்கள்  350

இறையன்பு – இறை நம்பிக்கை – இறைத் தியாகம்

உலகத்தின் எல்லா பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் எனும் புனித பயணத்தை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்வதை நாம் காணுகின்றோம். பொருளாதார பலமும் உடல் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது ஹஜ் கடமை என்று இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்பதை நாம் விளங்கவேண்டுமெனில், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இறை நம்பிக்கை என்ற ஒரு கோட்பாட்டை நாவினால் மட்டும் நவின்று விட்டு செல்லாமல் தன் வாழ்நாள் முழுவதையும் அதன் அடிப்படையில் அமைத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஓர் ஒப்பற்ற இறைத்தூதர். தான் மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தையும் அதன் அடிப்படையில் அமைத்தார்கள்.