மதத்தால் மாறுபட்டோம்
இனத்தால் வேறுபட்டோம்
உணர்வால் ஒன்றுபட்டோம்
அடிமை சங்கிலியை அறுத்தெறிந்தோம்
சுதந்திரம் அடைந்தோம்
அரசியல் சாசனம் அமைத்தோம்
ஒன்றாய் உழைத்தோம்
உயர்வை அடைந்தோம்
இனம் கொண்டே உதவிட
இன்னும் நினைக்கிறோம்
இன வேறுபாட்டை கலைத்திட
மனம் மறுக்கிறோம்
புதிய மலேசியாவை
புவியில் படைத்திட்டோம்
புதிய எண்ணங்களை
மனதில் விதைக்க மறந்தோம்
என்று மாறுமோ
இந்த நிலைப்பாடு
ஏக்கத்துடன் கொண்டாடுகிறேன்
சுதந்திர தினத்தை
“மெர்டேக்கா”